செல்ஃபோனில் ‘விளையாடும்’ ஆர்வத்தில்... இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... நொடிகளில் நடந்த ‘விபரீதம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 13, 2019 11:04 AM

பப்ஜி விளையாட்டை ஆர்வமாக விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Lost In PUBG MP Man Drinks Acid Instead Of Water Dies On Train

மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சவுராப் யாதவ் (20). இவர் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியரில் இருந்து ஆக்ராவிற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது நகை தொழில் செய்துவரும் சந்தோஷ் சர்மா ஒரு வேலைக்காக நகைகளை பாலிஷ் செய்யும் ஆசிட்டை ஒரு பாட்டிலில் வைத்து பையில் எடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில் ரயில் பயணத்தின்போது செல்ஃபோனில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சவுராப்பிற்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அப்போது  விளையாடும் ஆர்வத்தில் அவர் தண்ணீர் என நினைத்து சந்தோஷ் சர்மா பையில் இருந்த ஆசிட்டை எடுத்துக் குடித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் மயக்கமடைந்து சரிந்துவிழ, அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், சவுராப்புடைய பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : #SMARTPHONE #MADHYA PRADESH #TRAIN #PUBG #GAME #WATER #ACID #FRIEND