'இப்படி ஒரு ட்விஸ்டா?'.. 16 வயது பாய் ஃபிரண்ட் உதவியுடன் .. 'தந்தையை அடித்து கொன்ற இளம்பெண்' வழக்கில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 17, 2019 12:43 PM

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது 16 வயது காதலனுடன் இணைந்து தந்தையையே கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து பரபரப்பு திருப்பம் உண்டாகியுள்ளது.

accused girl is a minor in bennet robello suitcase murder case

அண்மையில் மும்பையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், தனது 16 வயது காதலனை பிரிக்க நினைத்து, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தனது 55 வயது வளர்ப்பு தந்தை பென்னட் ரிபலோ (bennet robello) என்கிற இசைக் கலைஞரை, தனது காதலனுடன் இணைந்து தலையில் அடித்துக் கொன்று உடல் பாகங்களை இரண்டாக பிரித்து தனித்தனி சூட்கேஸில் (suitcase) நதியிலும் ஆற்றிலும் தூக்கி எறிந்துவிட்டார்.

அதன் பின் தனது நோட்டில், ‘என்னை மன்னித்துவிடுங்க அப்பா.. வாழ்வளித்த உங்களையே நான் கொன்னுட்டேன்’ என்று எழுதியிருந்ததால் இளம் பெண் பிடிபட்டார். இவ்வழக்கில் இளம் பெண்ணின் காதலரான 16 வயது வாலிபர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பபட்டார். அதன் பின் இளம் பெண்ணிடம் விசாரணையைத் துவங்கிய போலீஸார், இளம் பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை தேதிகளின் படி அவருக்கு பதினேழரை வயதே ஆகியுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

அதிரவைத்த இந்த பரபரப்பு திருப்பத்தை அடுத்து, இளம் பெண்ணின் வயதை கண்டுபிடிக்கும் இன்ன பிற மருத்துவ ரீதியான பரிசோதனைகளை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். அதுவரையில் இளம் பெண்ணை சிறுவர் சீர்திருத்தக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

Tags : #DAUGHTER #MUMBAI #MURDER #SUITCASE #BENNET ROBELLO