'அந்த பயம் இருக்கட்டும்!'.. 'பெரியார் பற்றிய பதிவா'.. மு.க.ஸ்டாலின் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 24, 2019 04:15 PM
தந்தை பெரியாரின் 46வது தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, பல அரசியல் பிரபலங்களும் பெரியாருக்கு தங்கள் நினைவஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்திய அளவில் #Periyar ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிவரும் நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் உட்பட பலரும் பெரியாரின் மதச்சார்பின்மை, முற்போக்கு சிந்தனை, சமூக நீதி உள்ளிட்டவற்றை மீட்டெடுக்க உறுதி கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாஜக பெரியார் பற்றிய ஒரு பதிவை பதிவிட்டு, பின் நீக்கிவிட்டதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், ‘#Periyar-ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கம் அதை நீக்கியுள்ளது. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!
அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?’ என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.
#Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது @BJP4TamilNadu அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!
அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?
— M.K.Stalin (@mkstalin) December 24, 2019
