இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 25, 2019 11:21 AM

1. லக்னோ நகரத்தில் உள்ள லோக் பவனில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Tamil news important headlines read here for more dec 25

2. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

3. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது.

4. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.58 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.82 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5. டிசம்பர் 27ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

6. இலங்கை சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அந்நாட்டு அமைச்சர் பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

7. பெரியாரை இழிவுப்படுத்தும் விதமாக தமிழக பாஜகவினர் ட்வீட் செய்தது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

8. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.264 உயர்ந்து 29,584 ரூபாய்க்கும்  கிராமுக்கு ரூ.33 உயர்ந்து 3,698 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

9. தேசிய குடிமக்கள் பதிவேட்டை, நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

10. ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை தக்கவைத்தார்.

Tags : #TOPNEWS #CHRISTMAS #HANUMAN JAYANTHI #VAJPAYEE