புத்தாண்டை முன்னிட்டு ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்... ‘மகிழ்ச்சியில்’ வாடிக்கையாளர்கள்...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Dec 25, 2019 10:47 PM

பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

New Year Offer BSNL Rs 1999 Prepaid Plan Gets Extra Validity

சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் பிரீபெய்ட் சேவைக் கட்டணங்களை உயர்த்திய நிலையில், ஜியோ நிறுவனம் சிறப்பு புத்தாண்டு சலுகையை அறிவித்தது. அதைத்தொடர்ந்து தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனமும் புத்தாண்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ரூ 1999 சலுகையில் கூடுதலாக 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில் தற்போது புத்தாண்டு சலுகையை முன்னிட்டு 425 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ், பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், பி.எஸ்.என்.எல். டிவி சந்தா ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை டிசம்பர் 25ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதைத்தவிர, பி.எஸ்.என்.எல். ரூ 450 சலுகையில் ரூ 500 டாக்டைம், ரூ 250 சலுகையில் ரூ 275 டாக்டைம் ஆகிய சலுகைகள் ஜனவரி 2ஆம் தேதி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #AIRTEL #JIO #VODAFONE #BSNL #OFFER #CHRISTMAS #NEWYEAR