‘நீ அந்த ஃபோட்டோஸ்லாம் அனுப்பு.. பாலிவுட் நடிகை மாதிரி இருப்ப!'.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 27, 2019 11:38 AM

மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நாமக்கலில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் பள்ளியில் தனக்குக் கொடுத்த மடிக்கணினியில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று மூழ்கியிருந்துள்ளார்.

youth blackmailed school girl using her Instagram pics

இதனிடையே மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சார்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் அல்ஹசன் என்கிற தனியார் கல்லூரி மாணவர், இன்ஸ்டாகிராமில் மாணவியை பின் தொடர்ந்ததாகவும், நட்பாக பழகியதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் இன்ஸ்டாகிராமில், ‘அரைகுறை ஆடைகளுடன் கூடிய புகைப்படங்களை எடுத்து அனுப்பினால் நீ பாலிவுட் நடிகை மாதிரி இருக்கிறாய்’ என்று மாணவன் கூறியதில் மயங்கி, தனது அந்த வகையான புகைப்படங்களை அல்ஹசனுக்கு அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு நாமக்கலுக்கு சென்ற அல்ஹசன், அங்கு ஒரு அறை எடுத்து தங்கி, பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகிய கல்லூரி மாணவர், மாணவியின் அரைகுறை ஆடைகளுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளிவிடுதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின் மாணவி கொடுத்த புகாரின் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அல்ஹசன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.