‘ஐபேடில் சிறார் ஆபாச வீடியோ’!.. சிக்கிய சென்னை நபர்..! போலீஸ் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 24, 2019 06:03 PM
சென்னையில் சிறார் ஆபாச படத்தை டவுன்லோடு செய்த 72 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வது, பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய திருச்சியை சேர்ந்த ஜோசப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த மோகன் என்ற 72 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தனது ஐபேடில் சிறார் ஆபாசப் படங்களை பதிவிறக்கி, தனது வீட்டில் வாடைக்கு குடியிருக்கும் கல்லூரி மாணவிகளிடம் காட்டியதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த ஐபேடையும் பறிமுதல் செய்யதுள்ளனர்.
Tags : #POLICE #CHENNAI #OLDMAN #ARRESTED
