‘ஆண் நண்பருடன் சேர்ந்து கொடூரக் கொலை’.. ‘நாடகமாடிய மனைவியை’.. ‘காட்டிக் கொடுத்த செல்ஃபோன்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 17, 2019 03:19 PM

திருவள்ளூர் அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Thiruvallur Woman murders husband with help of lover near Chennai

திருவள்ளூர் கும்மிடிபூண்டியை அடுத்த சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 12ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீஸாருக்கு, எதுவும் தெரியாததுபோல நாடகமாடிய முருகனின் மனைவி தேவியின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து தேவியின் செல்ஃபோனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் வினோத் என்பவருடன் அடிக்கடி ஃபோனில் பேசியது தெரியவந்துள்ளது.

பின்னர் போலீஸார் தேவியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் வினோத் என்பவருக்கும் அவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததும், அதைக் கண்டித்ததால் வினோத்தை வீட்டிற்கு வரவழைத்து முருகனைக் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வினோத் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : #CHENNAI #THIRUVALLUR #HUSBAND #WIFE #MURDER #LOVER #AFFAIR #PHOTOGRAPHER #CELLPHONE