‘டியூசன் டீச்சரிடம் தப்பா நடக்க முயன்ற 11ம் வகுப்பு மாணவன்’.. தடுக்கும்போது நடந்த கொடுமை..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 24, 2019 01:06 PM

தவறாக நடக்க முயன்ற 11ம் வகுப்பு மாணவனை தடுத்த டியூசன் டிச்சரை கத்தியால் குத்திவிட்டு ஓடிய மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kanyakumari tuition teacher held for thrashing 11th std student

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி (25). பி.எட் பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்துள்ளார். மெர்லினிடம் அப்பகுதியை சேர்ந்த ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸ் (16) டியூசன் படித்து வந்துள்ளார். ஜெனிஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாணவன் ஜெனிஸ், டியூசன் டீச்சர் மெர்லின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பள்ளிக்கு செல்லவில்லையா என மெர்லின் கேட்டுள்ளார். திடீரென மாணவன் ஜெனிஸ், மெர்லினிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மெர்லின் கூச்சலிட்டுள்ளார். அந்த சமயம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெர்லினை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஜெனிஸ் தப்பியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த மெர்லினை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். கத்தியால் சரமாரியாக குத்தியதால் பலத்த காயமடைந்த மெர்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் தலைமறைவாக உள்ள மாணவன் ஜெனிஸை தேடி வருகின்றனர். 11ம் வகுப்பு மாணவன் டியூசன் டீச்சரிடம் தவறாக நடக்க முயன்று கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #KANYAKUMARI #TUITION #TEACHER #STUDENT