‘சீனாவில் இருந்து திரும்பிய’... ‘மருத்துவ மாணவர்கள்’... ‘அங்க என்ன நடக்குது’... ‘கூறும் உண்மை இதுதான்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருபுறமிருக்க அதுகுறித்த வதந்திகளும் பரவி வரும் நிலையில், சீனாவிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர் பேட்டியளித்துள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், இப்போது உலகின் பல நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாணவர் சீனாவில் செஜியாங்க் நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப சீன அரசு உத்தரவிட்டதையடுத்து, ஜனவரி 26-ம் தேதி சென்னை வந்த மாணவர் சந்திரசேகரன், மருத்துவப் பரிசோதனைக்கு பின் சொந்த ஊரான ஓசூருக்கு வந்துள்ளார். ஊருக்கு திரும்பிய சந்திரசேகரன், தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர், கொரோனா வைரஸ் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாணவர் சந்திரசேகரன், ‘சமூக வலைதளங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தகவல்கள் முற்றிலும் வதந்தியானது. அதனை யாரும் நம்ப வேண்டாம். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது’ என்றார்.
இதேபோல் புதுக்கோட்டையை சேர்ந்த அமிஸ் பிரியன் என்ற மருத்துவ மாணவர் சீனாவிலிருந்து திரும்பியுள்ளார். அவர் கொரோனா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவரும் வதந்திகளை நம்பாமல் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
