இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 05, 2019 10:49 AM

1. திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தோரை கைது செய்யக்கோரி பொன்னேரி அருகே பள்ளி மாணவர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tamil News important headlines read here for more Nov 5

2. நவம்பர் 2ல் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் போலீசாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை, டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3. தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னர் ராஜராஜசோழனின் 1034-வது சதய விழா மங்கள இசையுடன் இன்று தொடங்கியது.

4. விலை மதிப்பற்ற வாழ்நாட்களை இழந்து வருகிறோம் என காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

5. வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதால் இன்றுமுதல் 7ம் தேதி வரை மீனவர்கள் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6. காற்றாடி, மாஞ்சா விற்றால் குண்டாஸ் பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

7. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்வதும் அரசின் கடமை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

8. டெல்லி போலீசார் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

9. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்திற்காக வீரர்கள் தேர்வு பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

10. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Tags : #VIRATKOHLI #HEADLINES