‘அவர் இன்னும் அப்படியே தான் இருக்காரு’.. ‘மாஸ் கேட்ச் பிடித்த பிரபல இந்திய வீரர்’.. ‘புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 04, 2019 04:43 PM

தியோடர் டிராஃபி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் ஒரு கையால் பறந்து பிடித்த கேட்ச் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

VIDEO Dinesh Karthiks One Handed Stunning Catch In Deodhar Trophy

தியோடர் டிராஃபி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா சி அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், இந்தியா பி அணி வீரர் பார்திவ் படேல் அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட் செய்துள்ளார். இறுதி போட்டியின்போது தினேஷ் கார்த்திக் பறந்து ஒரு கையால் கேட்ச் பிடிக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிலர் தினேஷ் கார்த்திக்கின் வயதை வைத்து அவருடைய ஆட்டத்தை விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர் முன் போலவே தான் இப்போதும் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் அவரை பாராட்டி அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

Tags : #DINESHKARTHIK #DEODHARTROPHY #TEAMINDIA #CATCH #VIRAL #VIDEO