‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம்’.. ‘திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி’.. ‘தாய்லாந்தில் அசத்திய பிரதமர் மோடி’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Nov 03, 2019 11:06 AM

தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

VIDEO Thailand PM Modi Recites Tamil Poem from Thirukkural

நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி நடைபெறும் ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு தொடக்க நிகழ்ச்சியாக தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றியுள்ளார். அப்போது அவர் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் வணக்கம் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி பேசும் போது, ‘தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். அதன் பொருள் தன் முயற்சியால் ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என எண்ண வேண்டும் என்பதே ஆகும். மேலும் இந்த நிகழ்ச்சியில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

 

 

Tags : #THAILAND #PM #MODI #TAMIL #THIRUKKURAL #VIDEO #THIRUVALLUVAR