"கும்கி படத்துல வர்ற கொம்பனா இருக்குமோ?!"... "600 பள்ளிகளுக்கு 'விடுமுறை' அளிக்கவைத்த அந்த யானை யார்?"...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 24, 2020 04:24 PM

இரண்டு பேரைக் கொன்ற காட்டு யானைக்கு அச்சப்பட்டு, ஒடிசா மாநிலத்தின் மாவட்டம் ஒன்றில் முன்னெச்சரிக்கையாக 600 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

collector declares holiday for 600 schools fearing elephant

ஒடிசா மாநிலத்தின் கியோன்ஜார் மாவட்டத்திற்கு உட்பட்ட கொரி, தானாகாதி, சுகிந்தா பகுதிகளில், காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. நீர்த்தேவைக்காகவும், உணவுத்தேவைக்காகவும் காடுகளில் இருந்து நகருக்குள் வந்துள்ளது. வனத்துறையினர் பல முறை இந்த யானையை காட்டுக்குள் விரட்டிய நிலையிலும், அந்தக் காட்டு யானை அண்மையில் கொரி பகுதிக்குச் சென்றுள்ளது. அங்கிருந்த மக்கள் அந்த யானையை விரட்டியடிக்கவே, அது இரண்டு முதியோர்களை மிதித்துக் கொன்றது.

அச்சமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த யானையைப் பிடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

காட்டு யானை தற்போது அந்த பகுதியில் சுற்றித் திரிவதால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் குருஷ்ணா சந்திரா நாயக் கூறும்போது, ஒடிசா வரலாற்றிலேயே ஒற்றை யானைக்காக 600 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது இதுவே முதல் முறையாகும் என்றார்.

Tags : #HOLIDAY #ODISHA #ELEPHANT