'குளிரில் நடுங்கியநிலையில்'... 'பிறந்து சில மணி நேரமே ஆன'... 'பச்சிளம் பெண் குழந்தை'... ‘அதிர்ந்த காவலாளிகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 01, 2019 07:58 PM
ஏரிக்கரையில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங் பெண் குழந்தையை வீசி சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு உள்ளது. இதன் எதிர்புறம் உள்ள ஏரிக்கரையில் உள்ள முள்புதரில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து, வாணிபக் கிடங்கின் காவலாளிகள் இருவரும், ஏரிக்கரையில் சென்று பார்த்தனர். அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று, பழைய லுங்கியில், குளிரில் நடுங்கியபடி துடித்து அழுது கொண்டிருந்தது. இதனால் பதறிப்போன காவலாளிகள் குழந்தையை தூக்கி துணியால் போர்த்தி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பின்னர் அங்கு வந்த போலீசார், காவலாளிகள் உதவியுடன், இருசக்கர வாகனத்தில், குழந்தையை, கொண்டுபோய் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் 3.8 கிலோ எடை கொண்ட இந்த பெண் குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உதட்டு பகுதி சிறிது பிளவுபட்டு இருப்பதால், பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில், அந்த பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை அவர்கள் பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.