‘சுஜித்தை தொடர்ந்து மீண்டும் ஒரு சோகம்’.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Nov 04, 2019 11:43 AM
ஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் நேற்று இரவு 5 வயது சிறுமி எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் சிறுமியை மீட்கும் பணியில் இறங்கினர். சுமார் 50 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்றது
ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுமிக்கு ஆக்ஸிசன் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. பல மணி நேரங்களுக்கும் மேலாக நடந்த மீட்பு பணியை அடுத்து, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி அருகே சில தினங்களுக்கு முன்பு சுஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#UPDATE Haryana: The 5-year-old girl who had fallen into a 50-feet deep borewell in Hari Singh Pura village of Karnal, has died. https://t.co/KWEgAHAVad
— ANI (@ANI) November 4, 2019
