'8 வருடக்காதல்'.. திருமணமான '7 நாட்களில்' கணவரை 'ஜெயிலுக்கு' அனுப்பிய மனைவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 20, 2019 12:36 PM

8 வருடங்கள் உயிருக்கு உயிராகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவரை, மனைவி ஜெயிலுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Caste Related Issue: Girlfriend sent her husband to Jail

சேலம் மாவட்டம் அழகாபுரம் வாழப்பாடியான் வட்டம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன்  சுரேஷ்குமாரும் (வயது 26),இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சோபியா (24) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்து சமீபத்தில்(செப் 12)திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் இருவரது வீட்டிலும் இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. இதனால் வீட்டைவிட்டு ஓடிச்சென்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.தொடர்ந்து சேலம் சூரப்பன் நகர் பகுதியில் வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர்.இந்தநிலையில் திருமணமான சில நாட்களில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஜாதி குறித்த சண்டை ஏற்பட்டுள்ளது.

8 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்ட சோபியா இதனால் மனம் உடைந்து,இனிமேல் இவருடன் சேர்ந்து  முடியாது என முடிவெடுத்துள்ளார். தொடர்ந்து ஜாதியை சொல்லி திட்டியதாக சுரேஷ்குமார் மற்றும் அவரது அப்பா-அம்மா 3 பேர் மீதும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது பெற்றோரையும்  தேடி வருகிறார்கள்.

திருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலியால் இருவரது உறவினர்கள் மத்தியிலும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.இதனால் அந்த பகுதியில் சற்று பதட்டம் நிலவி வருகிறது.

Tags : #SALEM #MARRIAGE