‘சிந்துவை கல்யாணம் பண்ண போறேன்’ ‘அதுக்கான எல்லாம் தகுதியும் என்கிட்ட இருக்கு’ அதிர வைத்த முதியவர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 17, 2019 08:37 AM

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்யப்போவதாக முதியவர் ஒருவர் ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A Old man gave petition to the Collector about marrying PV Sindhu

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள விரதகுளம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி (70). இவர் பி.வி.சிந்துவின் புகைப்படத்துடன் கூடிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்து வந்துள்ளார். பின்னர் மனுவை ஆட்சரிடம் கொடுத்து பி.வி.சிந்துவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த முதியவர், ‘நான் அவளை விவாகம் பண்ணப் போறேன். அதுக்கான நடவடிக்கை எல்லாம் மேற்கொண்டுவிட்டேன். இதை யாருடைய உதவியும் இல்லாமல் பண்ண முடியும். நான் வயதான தோற்றத்தில் இருக்கிறேன். என்னுடைய வயது வெறும் 16 தான். விளையாட்டுத்துறை எனக்கு பிடிக்கும் அதனால் இதைப் பண்ணப்போகிறேன்’ என நீயூஸ் 7 பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COLLECTOR #PVSINDHU #OLDMAN #PETITION #MARRIAGE #RAMANATHAPURAM #BADMINTON