‘காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிக்கு’.. ‘ஊர் கூடி கொடுத்த விசித்திர தண்டனை’.. ‘வைரலாகும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 18, 2019 12:58 PM

காதலித்து திருமணம் செய்த புதுமணத் தம்பதியை அடித்து உதைத்த ஊர்மக்கள் அவர்களுக்கு விசித்திரமான தண்டனை கொடுத்துள்ளனர்.

Gujarat couple thrashed paraded by villagers Watch Video

குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்திலுள்ள மோலி என்ற கிராமத்தில் ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதையறிந்து அவர்களைப் பிடித்து அழைத்து வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு தண்டனையாக அந்த இளைஞரை துன்புறுத்தி அந்தப் பெண்ணை அவர் தோள் மீது சுமந்தபடி ஊரை வலம்வரச் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதை அடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #GUJARAT #LOVE #MARRIAGE #COUPLE #PUNISHMENT #SHOULDER #VIRAL #VIDEO