‘காரணமே இல்லாம தினமும் அடிப்பாங்க’.. ‘9 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்’ நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Sep 20, 2019 12:04 PM
உக்ரைன் நாட்டில் பெற்றோர் அடித்ததால் சிறுவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் கிவ் தலைநகரில் ஆண்டன் என்ற 8 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இவனது பெற்றோர் காரணமின்றி தினமும் அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் மனவேதனையுடன் இருந்துள்ளான். இந்நிலையில் சம்பவத்தன்று துணி கிழிந்தது தொடர்பாக ஆண்டனை அவனது தாய் மற்றும் தந்தை இருவரும் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வீட்டின் 9 -வது மாடியில் இருந்து சிறுவன் குதித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனை அடுத்து சிறுவனின் பெற்றோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர் அடித்ததால் மனவேதனையில் சிறுவன் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Govt. Medical Helpline - 104
Sneha (Suicide Prevention) Helpline - 044-24640050.
Child Helpline - 1098
