'இப்படியே இருந்தா கல்யாணம் பண்ண பொண்ணு கெடைக்காது'.. போலீஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 12, 2019 12:08 PM

ஹைதராபாத்தில் மணப்பெண் கிடைக்காததால் தனது கான்ஸ்டபிள் வேலையை ராஜினாமா செய்துள்ள 29 வயது இளைஞரது செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Unmarried Police constable quits his job to get marriage

ஹைதராபாத்தின் சார்மினார் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக கடந்த 2014-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து வந்த சித்தாந்தி பிரதாப் என்பவர்தான் சமீபத்தில் தனது ராஜினாமா கடிதத்தை ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடத்தில் கொடுத்தார்.

என்ஜினியரிங் படித்த சித்தாந்தி பிரதாப் காவல் துறையின் மீது இருந்த ஆர்வ மிகுதியால் காவல் துறையில் இணைந்து பெரிய காவல் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறும் அளவுக்கு சிறப்பாக பணியாற்றி வந்ததாக குறிப்ப்டும் சித்தாந்தி பிரதாப், ஆனால் அதே சமயம், தான் மணம் செய்துகொள்ள ஒரு மணப்பெண்ணைத் தேடும்போது, தான் ஒரு கான்ஸ்டபிள் என்பதாலேயே நிராகரிக்கப்பட்டதாக வருந்தி கூறியுள்ளார்.

24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணி வரலாம், இரவு நேர பணி செய்ய வேண்டியுள்ளது, வார விடுமுறைகளை தியாகம் செய்ய வேண்டும், தவிர காவல்துறை என்பது ஒரு சேவை என்பதால் இல்லத்தை சரிவர கவனிக்க இயலாது என்பதோடு தனக்குத் தெரிந்து எத்தனையோ கான்ஸ்டபிள் அதிகாரிகள் 30-40 வருடங்களாக புரோமோஷனே இல்லாமல் கான்ஸ்டபிளாகவே ஓய்வு பெற்றிருக்கிறார்கள் என்பதால், இந்த பணியை ராஜினிமானா செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Tags : #CONSTABLE #BRIDE #POLICE #JOB #MARRIAGE