‘திருமண நாளில் மாப்பிள்ளை செய்த காரியத்தால்’... 'மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘உறைந்துபோய் நின்ற உறவினர்கள்’...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 12, 2019 09:32 AM

மதுரை அருகே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டநிலையில், திருமண நாளில் மணமகன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

the groom who escaped in wedding day bride shocked

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் கருப்புசாமி. 25 வயதான இவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின், 22 வயது பெண்ணுக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரின் ஒப்புதலின்படி கடந்த புதன்கிழமையன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இரு வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைப்பெற்றன.

மணமகள் வீட்டில் திருமணம் நடக்க இருந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமையன்று இரவு, திடீரென மணமகன் கருப்புசாமி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் மணமகளும், பெண் வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். எனினும் மணமகன் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்த பெண் வீட்டார், சீர்வரிசை பொருட்களுடன் மணமேடையில் காத்திருந்தனர். மணமகளும் தயாராக இருந்த வேளையில், தாலி கட்டும் நேரம் வரை மணமகன் கருப்புசாமி வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெண் வீட்டார், மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் கருப்புசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி, மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் தலைமறைவான மணமகனை கண்டுபிடித்து தண்டிக்கக் கோரி, பெண் வீட்டார் வலியுறுத்தினர். தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம், கடைசி நேரத்தில் நின்றதால், பெண் வீட்டாரும், மணமக்களை வாழ்த்த வந்திருந்த உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.

Tags : #MADURAI #WEDDING #MARRIAGE #BRIDE #GROOM