'பட்டுச்சேலை கட்டிட்டு வரேன்னு போன பொண்ணு'...'தவித்து நின்ற மணமகன்'...கடைசி நேரத்தில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 04, 2019 12:02 PM

தாலி கட்டும் நேரத்தில் பட்டுச்சேலை கட்டிவர சென்ற மணப்பெண், காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bride escape before marriage in vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். கட்டிட மேஸ்திரியான இவருக்கும், அவருடைய உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவரது திருமணமும் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவே மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்திற்கு வந்திருந்தனர்.

இதனிடையே நேற்று அதிகாலை திருமண முகூர்த்தத்திற்காக திருமண வீடு களைகட்டியிருந்தது. திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் மணமகள் ஐஸ்வர்யா திருமண பட்டுச்சேலை கட்டிவருவதாக கூறி மணமகள் அறைக்கு சென்றுள்ளார். மணபெண்ணுக்காக, உறவினர்கள் மற்றும் மணமகன் காத்துக்கொண்டிருக்க, பட்டுச்சேலை கட்டி வரச்சென்ற மணமகள் நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் பதற்றம் அடைந்தார்கள்.

இதையடுத்து மணமகள் அறைக்கு சென்று பார்த்த போது, ஐஸ்வர்யா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மணப்பெண்ணை காணவில்லை என திருமணமண்டபத்தில் காத்திருந்தவர்களுக்கு தெரியவந்ததும் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணப்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிய போதும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்றது.

தாலிகட்டும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் மணமகனை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருந்தவர்கள் சோகத்துடன் வெளியேறினார்கள். இதனைத்தொடர்ந்து மணப்பெண்ணின் பெற்றோர் குடியாத்தம் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BRIDE #MARRIAGE #VELLORE