‘சுத்தி பார்க்கலாம்னு ஆசையாப் போன’... ‘புதுமணத் தம்பதிக்கு மூன்றே நாளில்’... ‘நெஞ்சை உருக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 06, 2019 03:04 PM

திருமணமாகி 3 நாளில் சுத்தி பார்க்க சென்றுவிட்டு, பைக்கில் திரும்பிய புதுமணத் தம்பதிக்கு நடந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newly married couple met accident in Yelagiri wife died

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டையைச் சேர்ந்தவர் 28 வயதான மணிகண்டன். எலெக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவருக்கும், புதூர் அண்ணா நகரைச் சேர்ந்த 24 வயதான திவ்யா என்பவருக்கும், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதியான இவர்கள், தங்களது பைக்கில் அருகில் உள்ள ஏலகிரி மலைக்கு கடந்த வியாக்கிழமையன்று தனியாக சென்றனர். மாலை நேரம் ஆகிவிட்டதால் புதுமணத் தம்பதி, மலை உச்சியிலிருந்து பைக்கில் கீழே இறங்கியுள்ளனர்.

அப்போது 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, மலை அடிவாரத்திலிருந்து உச்சிக்கு, அதிவேகத்தில் நேர் எதிரே கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. இதனால் புதுமாப்பிள்ளையான மணிகண்டன் தடுமாறினார். பைக்கை நிறுத்த முயற்சி மேற்கொண்டபோது, அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. மணிகண்டனும், அவரின் பின்னால் அமர்ந்திருந்த மனைவி திவ்யாவும், கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அடுத்த சில நொடிகளில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் திவ்யா துடிதுடித்து கணவன் கண்முன்னே உயிரிழந்தார்.

மணிகண்டன் ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்துவந்து, மனைவியின் உடலை கட்டிப்பிடித்துக் கதறி அழுதார். `கல்யாணமாகி மூணு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள எங்க வாழ்க்கையே முடிஞ்சு போச்சே. உனக்குப் பதிலா அந்த ஆண்டவன் என் உயிரை பறிச்சிருக்கலாம்’ என்று கூறிக் கதறி அழுதார். மனைவியின் உடலை விடாமல் மணிகண்டன் கதறி அழுதபடியே இருந்தார். பலர் ஆறுதல் கூறினர்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சுற்றுலாப் பயணிகளும் கண்கலங்கினர்.  தகவலறிந்து வந்த, ஏலகிரி காவல்துறையினர், புதுப்பெண்ணான திவ்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தொடாந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #YELAGIRI #MARRIAGE #COUPLE #WIFE #HUSBAND