'இதுக்கு மேல ஏன் இருக்கணும்'.. 'திருமணம் நின்றதால் மணமகளின் விபரீத முடிவு'.. கலங்க வைக்கும் கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 19, 2019 11:38 AM

திருமணம் நின்றுபோன சோகத்தில் எண்ணூர் பெரிய காசிகோவில் குப்பத்தின் அருகே பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த தனது சித்தி சுரேகாவின் வீட்டில்ம் 22 வயதான ப்ரீத்தாவும் அவரது தங்கையும் வசித்து வந்தனர்.

Bride marriage stopped due to Ex Love and commits suicide

ப்ரீத்தாவின் தாய் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோன நிலையில், இவ்வாறு வசித்து வந்த ப்ரீத்தா, பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு அடையாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். அப்பொழுது மாமல்லபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் ப்ரீத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் சந்தோஷ் சரியில்லை எனக் கூறி அவருடனான காதலை ப்ரீத்தா முறித்துக்கொண்டதாக தெரிகிறது.

எனினும் தொடர்ந்து சந்தோஷ் ப்ரீத்தாவை பின் தொடர்ந்தபடியும், அவரிடம் தனனை காதலிக்கும்படி வற்புறுத்தியும் வந்துள்ளார். இதனிடையே ப்ரீத்தாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி என்பவருடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

இந்த நிலையில் திடீரென மாப்பிள்ளை வெற்றியின் வீட்டாருக்கு ப்ரீத்தாவின் முந்தைய காதல் விவகாரம் தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் திருமணத்தை நிறுத்தியதால் விரக்தி அடைந்த ப்ரீத்தா தன் சாவுக்குக் காரணம், தனது முன்னாள் காதலன் சந்தோஷ்தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை அடுத்து இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக சந்தோஷை கைது செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : #ENNUR #MARRIAGE #LOVE