நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் ‘திடீரென பற்றிய தீ’.. ‘நொடியில் மளமளவெனப் பரவியதால் நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Sep 08, 2019 08:51 PM
சேலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து தருமபுரி நோக்கி பயணித்த கார் ஒன்றில் தோப்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்த, அதிலிருந்தவர்கள் வேகமாக காரைவிட்டு கீழே இறங்கியுள்ளனர். காரின் முன்பகுதியில் பற்றிய தீயானது நொடியில் கார் முழுவதும் பரவியுள்ளது.
இதைத்தொடர்ந்து தீ விபத்து குறித்து அவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி தீயணைப்பு வீரர்கள் காரில் மேலும் தீ பரவாமல் அணைத்துள்ளனர். காரில் தீ பற்றியதும் கீழே இறங்கியதால் அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். காரில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து தோப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
