‘ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்த இளைஞர்’.. ‘திருமணமான 7வது நாளில்’.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 05, 2019 08:24 PM

சென்னையில் திருமணமான 7வது நாளில் இளம் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl commits suicide 7 days after marriage in Chennai

சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த அன்பின்ராஜ் என்பவர் டிரைவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனிஷா (21) எனும் இன்ஜினியரிங் மாணவியைக் காதலித்து வந்துள்ளார். அதேசமயம் அன்பின்ராஜ் அனிதா எனும் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்பின்ராஜுக்கும், மனிஷாவுக்கும் பெசன்ட் நகரில் திருமணம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருமணமான 7வது நாளில் மனிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மனிஷாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அன்பின்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள போலீஸார், “பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மனிஷா கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்து அறிக்கை சமர்பித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளனர். ஆனால் தூக்கில் தொங்கிய மனிஷாவின் காலிலும், கழுத்திலும் காயங்கள் இருப்பதால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Tags : #CHENNAI #LOVEAFFAIR #GIRL #SUICIDE #MARRIAGE