சிறுமியிடம் தனியாக பேசிய 'வாலிபருக்கு'... சிறுமியின் உறவினர்களால் நேர்ந்த... நெஞ்சை பதற வைக்கும் 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சி அருகேயுள்ள சின்னாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கவுதம். பொள்ளாச்சியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஏழாம் தேதியன்று தனது தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த தோழியின் வயது 16 ஆகும். அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை, மாமன் மற்றும் அண்ணன் ஆகியோர் கடும் கோபத்தில் கிரிக்கெட் பேட், கட்டை ஆகியவற்றை கொண்டு அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த கவுதமை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் வாலிபரை தாக்கிய மூன்று பேர் மீதும் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதனையடுத்து இன்று காலை இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால் கவுதம் உயிரிழந்துள்ளார். இதனால் மூன்று பேர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். சிறுமியுடன் தனியாக பேசிக் கொண்டிருந்த நிலையில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
