'வேண்டாம்னு சொன்னோமே கேட்கலையே'... 'கதறிய குடும்பம்'... 'இளைஞருக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 08, 2020 04:15 PM

தஞ்சாவூரில் இளைஞர் ஒருவர் நண்பர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tanjore young man was killed by his friends, police investigate

தஞ்சாவூர் அருகே உள்ள கீழவாசல் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்த இளைஞர், கனி என்கிற அருண்குமார் (34). இவருக்கு இரண்டு மனைவிகள், மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லாத நிலையில், சுமார் 43 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மதுபானங்களை வாங்கி வந்து, தனது நண்பர்களான கதிர்வேலு, முத்து, பிச்சாண்டி ஆகியோருடன் அவரது வீட்டிலேயே நேற்றிரவு  அருந்தியுள்ளனர்.

விடிய விடிய குடித்தப்போது, கதிருக்கும் அருண்குமாருக்கும் இடையே அதிகாலையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த கதிர், அவரின் சகோதரர் பிச்சாண்டி மற்றும் முத்து ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அருண்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது கேட்ட அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், அங்கிருந்து மூன்றுபேரும் தப்பியோடி விட்டனர். அருண்குமார் துடிதுடித்து இறந்துவிட்டார்.

சம்பவம் அறிந்து வந்த அருண்குமாரின் மனைவி மற்றும் பிள்ளைகள், ‘குடிக்க வேண்டாம்னு சொன்னோமே.... இத்தனை நாளா குடிக்காமத்தானே இருந்தே, அப்படியே இருந்திருந்தா நீ உயிரோட இருந்திருப்பியே...' எனக் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருவதாக கூறியுள்ளனர். 'மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளே ஒரு கொடிய சம்பவம் நடந்து, எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது' என்று கூறுகின்றனர் அப்பகுதிவாசிகள்.

Credits: Vikatan