‘டாஸ்மாக்’ திறப்புக்கு தடை விதித்ததால் ஆத்திரம்?.. மர்மநபர்கள் செய்த ‘அட்டூழியம்’.. மதுரையில் அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 09, 2020 12:04 PM

மதுரை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Mstrious people sets Tasmac shop on fire in Madurai

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்க சில கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதியளித்தது. இதனை அடுத்து சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால் தற்போது மதுக்கடைகள் திறப்பதால் கொரோனா பரவலை அதிகரிக்கும் என பல்வேறு தரப்பில் இருந்து டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீது நேற்று நடைபெற்ற விசாரணையை அடுத்து ஊரடங்கு முடியும் வரை மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடினர். இதில் மதுக்கடைக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதனால் மதுபானங்கள் தீப்பற்றாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.