'நடத்தையில் சந்தேகம்'.. மனைவியை துண்டு-துண்டாக 'வெட்டி' கொலை செய்த கணவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 23, 2019 01:45 PM

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால்,அவரை கணவர் துண்டு,துண்டாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man chops wife’s body, dumps pieces in septic tank and drain

டெல்லியின் கிராரி பகுதியை சேர்ந்த அஷு(33)என்பவர் கம்ப்யூட்டர் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.இவருக்கு சீமா(30) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.சொந்த வீடு சற்று பழமையானது என்பதால் அதே பகுதியில் வேறு ஒரு வீடு எடுத்து அஷு-சீமா இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

சீமா வேறு யாருடனோ தொடர்பு வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் அஷுவுக்கு ஏற்பட்டுள்ளது.சிறிது சிறிதாக அஷுவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது.இதனால் தம்பதியர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.ஒருகட்டத்தில் மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அஷுவின் மனதில் ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பழைய வீட்டில் இருந்து பொருட்களை எடுத்து வர வேண்டும் என அஷு சீமாவை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சென்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த அஷு மனைவியைக் கொன்று அவரைத் துண்டு-துண்டாக வெட்டி வீட்டின் செப்டிக் டேங்கில் கை,கால்கள் மற்றும் தலையை போட்டுள்ளார்.உடலை ஒரு கேரிபேக்கில் வைத்து 2 கிலோமீட்டர் பைக்கில் சென்று அங்கிருக்கும் கால்வாய் ஒன்றில் வீசி எறிந்துள்ளார். தொடர்ந்து தனது மகள்களுக்கு போன் செய்து உங்கள் அம்மாவைக் கொன்று விட்டேன் எனக்கூறிய அஷு போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு நடந்தவற்றைக் கூறி சரண் அடைந்துள்ளார்.

அஷுவைக் கைது செய்த டெல்லி போலீசார் அவரது மனைவியின் உடலை 8 மணி நேர தேடலுக்குப்பின் கண்டறிந்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

Tags : #KILLED #MURDER #DELHI