‘பல வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை அது’.. ‘மறக்க நினைப்பதை செய்தியாக்கி’.. ‘விளாசித் தள்ளிய பிரபல வீரர்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 17, 2019 07:28 PM

தனது குடும்பம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள பத்திரிக்கையை பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விளாசியுள்ளார்.

Ben Stokes slams utterly disgusting tabloid story on family

பென் ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன் 1988ல் ஸ்டோக்ஸின் தாய்க்கும், அவருடைய முதல் கணவருக்கும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். அந்தக் குழந்தைகளை அவர்களுடைய தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு தான் ஸ்டோக்ஸின் தாய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த செய்தியை தற்போது இங்கிலாந்தின் டெய்லி பத்திரிக்கையான சன் முதல் பக்க கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “30 வருடங்களுக்கு முன் நடந்த தனிப்பட்ட, நாங்கள் மறக்க நினைக்கும் வேதனையான விஷயத்தை இன்று செய்தியாக வெளியிட்டுள்ளார்கள். இதுபோல எனது குடும்பத்தினரின் உணர்வுகளை அவமதிப்பு செய்யும் எதையும் என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரபலமாக இருப்பதால் என்னுடைய சுயவிவரம் பொதுவெளியில் எனக்கு விளைவுகளைத் தருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் பெயரைப் பயன்படுத்தி என் பெற்றோர், மனைவி, குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை ஆக்கிரமிக்கும் செயலை நான் அனுமதிக்க மாட்டேன்” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

 

Tags : #ENGLAND #BENSTOKES #FAMILY #MOTHER #FATHER #MURDER #SLAMS #NEWSPAPER