'சூனியம் வச்சு பொண்ண கொன்னுட்டான்'...'ஆட்டோ டிரைவர் மீது சந்தேகம்'...கோபத்தில் நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 19, 2019 04:33 PM

சூனியம் வைத்து பெண்ணை கொன்றதாக எழுந்த சந்தேகத்தில், ஆட்டோ டிரைவரை சிதையில் தள்ளிய கொடூரம் பலரையும் அதிரச்செய்துள்ளது.

Man thrown into woman burning pyre suspicion that he did black magic

தெலங்கானா மாநிலம் ஷமீர்பேட் பகுதியின் அதரசப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கயாரா லக்ஷ்மி. இவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததது. பல்வேரு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்காமல் கடந்த செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது மறைவு அவருடைய உறவினர்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவருக்கான இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் போயினி ஆஞ்சநேயலு இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்துள்ளார். அந்த நேரத்தில் கயாரா லக்ஷ்மியின் மறைவுக்கு ஆஞ்சநேயலு செய்த சூனியம் தான் காரணம் என அங்கிருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அப்போது சிலர் ஆஞ்சநேயலுவை அடித்து உதைத்துள்ளார்கள்.

இந்நிலையில் லக்ஷ்மியின் சிதைக்கு வைக்கப்பட்டிருந்த தீயில் ஆஞ்சநேயலுவை தூக்கி வீசியுள்ளார்கள். இந்த கொடூர சம்பவத்தில் ஆஞ்சநேயலு நெருப்பில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #MURDER #KILLED #BURNING PYRE #BLACK MAGIC #MAN THROWN