'கள்ளத்தொடர்பு' விவகாரம்?... 11 வயது 'சிறுமி'யைக் கொலை செய்த மாமா!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 19, 2019 07:32 PM

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த பெஹ்தா கிராமத்தில் 11 வயது சிறுமி தூக்கில் பிணமாகத் தொங்கியதைக் கண்டு,அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த சிறுமியின் பிணத்தைக் கைப்பற்றி விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

11 year old girl killed her uncle on suspicion of affair

தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை செய்தனர்.அப்போது சிறுமியின் தாய் சோட்டி பிடியா கூறுகையில்,''எங்கள் மகளுக்கு இதே பகுதியில் உள்ள 12 வயது சிறுவனுடன் தொடர்பு இருந்ததாக எனது கணவரின் உறவினர் மஜீத் தெரிவித்தார்.நான் இதனை நம்பவில்லை.தற்போது நாங்கள் விசாரித்ததில் மஜீத் தான் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது,''என்றார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,''போலீசிடம் இதுகுறித்து எதுவும் சொல்லக்கூடாது என்று அவரது உறவினர்கள் மிரட்டியுள்ளனர்.தற்போது அவர்கள் இருவரும் வழக்கின் முக்கிய சாட்சிகளாக மாறியுள்ளனர்,'' என்றார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MURDER