‘அப்பா கிட்ட எவ்ளோ சொல்லியும் கேட்கல’... ‘அதனாலதான் இப்டி பண்ணினேன்’... 'மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 12, 2019 12:59 PM

மதுரை அருகே பல பெண்களுடன் பழகிய தந்தையை மகனே, வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

son killed his father due to property issue in madurai

உசிலம்பட்டி அருகே கரையான்பட்டியை சேர்ந்தவர் 55 வயதான குபேந்திரன். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்தப்பின், 2-வது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் 2-வது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார் குபேந்திரன். இதற்கிடையே, பெரியகுளம் குள்ளபுரத்தை சேர்ந்த பேச்சி என்ற பெண்ணை திருமணம் செய்து, வைகை அணைப் பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தார்.

கடந்த திங்கள்கிழமை மாலை குபேந்திரன், அவரது குடிசையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். மனைவி பேச்சியின் புகாரில், வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குபேந்திரனுக்கு சொந்த ஊரில் ஏராளமான சொத்துகள் இருப்பதால், சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் குபேந்திரனை கொலை செய்ததாக, அவரது 2-வது மனைவியின் 25 வயதான மகன் முத்துபாண்டி, வைகை அணை கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரணடைந்தார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ‘எனது தந்தை, சொத்துக்களை வாரிசுகளுக்கு பிரித்து தரவில்லை. சில மாதத்திற்கு முன்பு அவருக்கு உடல்நலம் பாதித்தபோது, பல இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை அளித்தோம். சிகிச்சை முடிந்த பின்பு சொத்துக்களை விற்க அனுமதிக்காமல், வைகை அணைக்கே மீண்டும் வந்துவிட்டார். மேலும் தனது தந்தைக்கு பல பெண்களுடன் பழக்கம் இருந்ததாகவும், கடன் தொல்லை அதிகரித்ததால், இரு நாட்களுக்கு முன்பு இங்கு வந்து சொத்துக்களை விற்க வலியுறுத்தினேன். அவர் மறுத்ததால் ஆத்திரத்தில், மண்வெட்டியால் கழுத்தில் வெட்டி கொலை செய்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : #MADURAI #FATHERSON #MURDER