‘ஆடையைக் கிழித்து’.. ‘நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்திய’.. ‘சென்னை இளைஞருக்கு நடந்த அதிர வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Sep 20, 2019 05:16 PM

சென்னையில் அறிவழகன் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youngster brutally murdered by gang in Chennai

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரி என்கிற அறிவழகன் (25) நேற்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை உடல் முழுவதும் வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் தலையைப் பிளந்து மூளையை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாசதுக்கம் போலீஸார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள போலீஸார், “சில நாட்களுக்கு முன் அறிவழகனுக்கும் இதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அறிவழகன் நடுரோட்டில் அந்தப் பெண்ணின் ஆடையைக் கிழித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் அந்தப் பெண்ணின் மகன்களால் அவர் கொலை செய்யப்பட்டுக்கலாம்” எனக் கூறியுள்ளனர்.

Tags : #CHENNAI #YOUNGSTER #BRUTAL #MURDER #BRAIN