“உதவி கேட்பது போல் நடித்த மூதாட்டி!”.. உதவப்போன இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. “சென்னையை அதிர வைத்த ஆட்டோ ராணிகள்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jan 06, 2020 09:29 PM
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி பானு. பானு தன் வீட்டருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது உதவி கேட்பது போல் மூதாட்டி ஒருவர் நடித்துள்ளார்.

மனமிறங்கிய பானு, மூதாட்டியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று எதிரில் இருந்த ஆட்டோவிடம் கொண்டு செல்ல, மூதாட்டியை பானுவை வலுக்கட்டாயமாக பிடித்து ஆட்டோவுக்குள் இழுக்க, ஆட்டோவுக்குள் இருந்த இன்னும் 2 பெண்களும் பானுவை பிடித்து ஆட்டோவுக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டனர்.
அதற்குள் இன்னொரு பெண் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். போகும் வழியில் பானுவின் கழுத்தில் இருந்த 15 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்ட அப்பெண்கள், பானுவை ஒரு இடத்தை அடைந்ததும் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.
கிடுகிடுக்க வைத்த இந்த ஆட்டோ ராணிகளின் செயலால் அதிர்ந்த பானு, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அப்பெண்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
