'தூங்கிக்கிட்டு இருந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல்'...'சென்னையில் நடந்த கோரம்'...பதறவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 28, 2019 04:50 PM

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், வீடு முழுவதும் எரிந்து நாசமான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai: Accident as Cylinder Explodes at a Home in Vyasarpadi

சென்னை வியாசர்பாடி அருகே மேகசின்புரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் முதல் தளத்தில் சிமெண்ட் கூரை அமைத்து ராஜி என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்ற நிலையில், மகள் மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது மகள் மீனா திடீரென தூக்கத்தில் இருந்து விழித்துள்ளார். அப்போது வீடு முழுவதும் புகைமூட்டமாக இருந்துள்ளது.

இந்நிலையில் மீனாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் அவரது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். இதையடுத்து வெளியே வந்த அவர், கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். உடனே  அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டிலிருந்த சிலிண்டர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தீயை அணைக்க வந்த மக்கள் அனைவரும் பயத்தில் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். புதிதாக வாங்கிய சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : #FIREACCIDENT #ACCIDENT #CHENNAI #CYLINDER EXPLODES #VYASARPADI