'அடிமேல அடி'... 'வேகமாக பரவும் லாசா காய்ச்சல்'... '144 பேரின் உயிரை' காவு வாங்கிய கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 13, 2020 09:51 AM

உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 600-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சலின் அச்சமே மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் புதிதாக பரவும்  ‘லாசா’ காய்ச்சல் மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது.

Death toll reaches 144 from Lassa fever outbreak in Nigeria

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பரவும் ‘லாசா’ காய்ச்சல் ஒரு கடுமையான ரத்தக்கசிவு நோயாகும். 1969-ம் ஆண்டு நைஜீரியாவின் லாசா நகரில் இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால் அதற்கு ‘‘லாசா காய்ச்சல்’’ என்று பெயரிடப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டில் வேகமாக பரவிய இந்த காய்ச்சலுக்கு 112 பேர் உயிரிழந்தனர்.

இந்தசூழ்நிலையில் நைஜீரியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் லாசா காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது. எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து பரவும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இந்த ஆண்டு முதல் இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 855 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக நைஜீரியா மத்திய நோய்க்கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.   ஏற்கனவே கொரோனாவின் ஆட்டம் மக்களை கடுமையாக பதித்துள்ள நிலையில், லாசா காய்ச்சலின் தாக்கம் மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #LASSA FEVER #NIGERIA #DEATH TOLL