'அவங்க கை ஒரு ஆணோட கை தான், ஆனா இப்போ...' 'எப்படி இந்த கலர் சேஞ்ச் ஆகுதுன்னு தெரியல...' ஆச்சர்யத்தில் டாக்டர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிபத்தில் இரு கைகளையும் இழந்த பெண்ணுக்கு, ஆணின் கைகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது, அந்த மாற்றுக் கைகள், பெண்ணின் நிறத்துக்கு ஏற்ப மாற்றமடைந்திருப்பது குறித்து டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
ஷ்ரேயா சித்தனகௌடர் என்ற பெண், 2016-ம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்தார். இந்த நிலையில் 2017-ம் ஆண்டு சாலை விபத்தில் மரணம் அடைந்த 21 வயது இளைஞரின் கைகள் தானமாக அளிக்கப்பட்டு ஷ்ரேயாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் இணைக்கப்பட்டது.
இணைக்கப்பட்ட பின் ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் சிகிச்சை நடைபெற்றது. அதன் பயனாக கைகள் இரண்டுமே சற்று மெலிந்து ஷ்ரேயாவின் உடலுக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.
இந்த நிலையில், மருத்துவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் மேலுமொரு அதிசயமும் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால் கைகளின் நிறம், கொஞ்சம் கொஞ்சமாக ஷ்ரேயாவின்ன் நிறத்துக்கு ஏற்ப மாறியுள்ளதுதான். தற்போது அந்த மாற்றுக் கையின் நிறம் ஷ்ரேயாவின் உடல் நிறத்துக்கு ஏற்ப வெள்ளையாக மாறியுள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆணின் கைகளை பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது ஆசியாவிலேயே இது முதல் முறை என்பதால், ஆணின் கைகள், பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்றவாறு மாறியிருப்பதும் மருத்துவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் கருதப்படுகிறது.