சென்னையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸ்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 10, 2019 01:26 PM

வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ambulance collides with road accident in Chennai

சென்னையில் இன்று அதிகாலை அடையாரில் இருந்து மத்திய கைலாஷ் வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையின் தடுப்பில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் ஆம்புலன்ஸில் இருந்த டிரைவர் மற்றும் செவிலியருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விபத்தில் காயம் அடைந்த இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆம்புலன்ஸ் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது நோயாளிகள் யாரும் ஆம்புலன்ஸில் இல்லை என கூறப்படுகிறது. அதிகாலை வேளையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags : #ACCIDENT #CHENNAI #AMBULANCE #INJURED #NURSE #DRIVER