‘கிரஹபிரவேசத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றபோது’.. ‘பேருந்து மீது கார் மோதிய கோர விபத்தில்’.. ‘இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 08, 2019 11:16 PM

திருநெல்வேலியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 dead in government bus car accident in Tirunelveli

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம் (28) என்பவர் இன்று அதிகாலை தனது வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு பொருட்கள் வாங்குவதற்காக நேகவியா என்ற நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்தக் கார் ஈரோட்டிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்றின் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் சோமசுந்தரம், நேகவியா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TIRUNELVELI #CAR #GOVENMENTBUS #ACCIDENT #HOUSEWARMING