‘நொடியில் கல்லூரி மாணவர்களுக்கு நடந்த பயங்கரம்’.. ‘அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 06, 2019 09:13 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

2 dead in Government bus 2 wheeler accident near Srivilliputhur

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த இளைஞர்கள் அதே பகுதியிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு படித்து வந்த மணிகண்டன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிருஷ்ணன் கோயில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #VIRUDHUNAGAR #SRIVILLIPUTHUR #GOVERNMENTBUS #TWOWHEELER #ACCIDENT #COLLEGE #STUDENTS