‘2 வருஷமா தாங்கமுடியாத முதுகுவலி’!.. ‘இளம்பெண்ணுக்கு நடந்த ஆபரேஷன்’!.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 23, 2019 05:50 PM

முதுகுவலிக்கு மருத்துவமனை சென்ற இளம்பெண்ணின் உடலில் இருந்து துப்பாக்கிக் குண்டு எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bullet found in 19 year old woman\'s body in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஸ்மா (19). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான முதுவலி இருந்துள்ளது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவமனையில் அஸ்மாவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

அப்போது அவரின் உடலில் துப்பாக்கிக் குண்டு இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், துப்பாக்கிக் குண்டு எப்படி உடலில் வந்தது என அஸ்மாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் துப்பாக்கிக் குண்டு எப்படி வந்தது என்று தெரியவில்லை என அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அஸ்மாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டை பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ளனர். முதுகுவலிக்கு சென்ற இளம்பெண்ணின் உடலில் இருந்து துப்பாக்கிக் குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #HYDERABAD #BULLET #DOCTORS #WOMAN #SURGERY