உதவின்னு கேட்ட உடனே ஓடி வந்தவனிடம்...இப்படியா செய்வது?... இந்த நூதன கொள்ளைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 06, 2020 02:47 PM

நெல்லையில் நெடுஞ்சாலையில் விபத்த ஏற்பட்டிருப்பதாகக் கூறி இருச்சக்கரவாகனங்களில் வருவோரிடம் கொள்ளையடிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Police have arrested five people involved in the robbery

நெல்லை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டது போன்று நடித்து, உதவிக்கு வருபவர்களை அடித்து அவர்களிடமிருந்து வாகனங்கள் மற்றும் பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரை பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நான்குவழிச்சாலை ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருச்சக்கரவாகனத்தில் வேகமாக வந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெடுஞ்சாலைகளில் கொள்ளையடிக்கும் கும்பவல் அவர்கள்தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து நெல்லை பகுதியைச் சேர்ந்த முத்துவேல், ஹரிஹரன், மணிகண்டன், சங்கரநாராயணன், மாரிசக்தி, ஆகிய 5 பேரையும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் , மற்றும் 16 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : #THIRUNELVELI #PALAYAMKOTTAI #ROBBERY #ARRESTED #5 ROBBERS