‘திருமணத்திற்கு முன்பே காலையில்’... ‘குழந்தைப் பெற்ற கல்லூரி மாணவி’... ‘மாலையில் காதலரை கரம் பிடித்த சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 03, 2020 06:26 PM

திண்டிவனம் அருகே திருமணமாகாமலேயே கல்லூரி மாணவி குழந்தை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Student who had a child before the wedding near Tindivanam

திண்டிவனம் அருகே உள்ள கடவம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகள் கோகிலா (20). இவர், தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதேப் பகுதியைச் சேர்ந்த செங்கேணி மகன் பரமசிவம் (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தநிலையில், கோகிலா கர்ப்பமானார். கர்ப்பமானதை வீட்டில் சொல்ல பயந்துபோன கோகிலா கர்ப்பத்துடன் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கோகிலாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  உடனடியாக மருத்துவர்கள், குழந்தையின் தந்தை பெயரை கேட்டனர். ஆனால் கோகிலா திருதிருவென விழித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, கோகிலாவிடம் விசாரித்தனர். அதன்பிறகுதான் அவர், காதலர் பரமசிம் மூலம் தாயானது தெரியவந்ததை அடுத்து பரமசிவத்தை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர், கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின்னர் 2 பேரும் திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு போலீஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருவரும், மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். காலையில் பிரசவம் ஆனநிலையில், மாலையில் காதலரை கல்லூரி மாணவி திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : #POLICE #LOVERS #MARRIAGE #WEDDING