'எங்க வேணா ரசிகர் மன்றம் வெப்பேன்.. முடிஞ்சத பாத்துக்க' .. 'போதையில் போலீஸைத் திட்டி வீடியோ'.. ரசிகர்கள் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 25, 2019 10:07 PM

விழுப்புரம், செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம், உமையாள்புரம் கிராமங்களில் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து மது அருந்திவிட்டு, நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் வைப்பது தொடர்பாக தனிமையைல் ஆலோசித்துள்ளனர்.

men over challenged police by talking abused words

அப்போது, போலீஸிடம் அனுமதி வாங்குவது பற்றிய பேச்சு எழுந்தது. உடனே இருவரும் போலீஸாரை தரக்குறைவாக திட்டி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். 

அதன்படி வீரன் என்பவர், ‘விஜய் மன்றத்தை என் வீட்டில் வைப்பேன், சைமா ரோட்டுல வெப்பேன். தேர்தலுக்காக வெக்கல. விஜய் என் உயிரு. என் வீட்டு கம்பத்துல கொடி நடுவேன். உன்னால முடிஞ்சத பாத்துக்க.அதை தடுத்தா நான் கழுத்தறுத்து சாகுறதையும் இந்த வீடியோவுல பாப்பீங்க. எல்லரும் எனக்கு சப்போர்ட் பண்ணனும்’ என்று பேசியிருக்கிறார். 

இடையிடையே பேசிய சரத்குமார், ‘’சங்கீதமங்கலம் ரோட்டுல ரசிகர் மன்றம் நிக்கும்டா.. உங்களால என்னடா பண்ண முடியும்? அனந்தபுரம் குமாரு யாரா இருந்தாலும் வாங்கடா” என்று பேசியிருக்கிறார்.  

Tags : #POLICE #FANS #ARREST