சக அதிகாரியின் மகளிடம் சில்மிஷம்...பதறிப் போன தாய்...'ஐ.பி.எஸ்.' அதிகாரிக்கு நேர்ந்த கதி...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 06, 2020 05:06 PM

சக அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய போலீஸ் சூப்பிரெண்டு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

IPS officer arrested for sexual misconduct-Arrested pocso Law

அசாம் மாநிலத்தில்  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக பணியாற்றும்  ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சக பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் 13 வயது மகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 31 ந்தேதி ஐ.பி.எஸ் அதிகாரியின் இல்லத்தில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமியை, பங்களாவின் அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மூத்த போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் சிறுமியின் தாய், தனது மகளுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய உயரதிகாரிகள் அந்த ஐ.பி.எஸ் அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். போக்சோ மற்றும் 354-வது பிரிவு ஆகியற்றில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரியை தொடர்பு கொண்ட போது, அவர் ஊடகங்களிடம் பேச மறுத்துள்ளார்.

Tags : #SEXUAL MISCONDUCT #POCSO #ARREST #IPS OFFICER