‘வீடு புகுந்து 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை’! நிர்வாணமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்ற மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 02, 2019 04:58 PM

நான்கு வயது பெண் குழந்தையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை பொதுமக்கள் நிர்வாணமாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maharashtra man paraded naked for rape bid on minor girl

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் வைத்யா (36). இவர் ஒரு வங்கியில் தினசரி பண வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் வழக்கமாக பணம் வசூல் செய்ய சென்றுள்ளார். அப்போது ஒரு வீட்டில் 4 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளது.

இதனைப் பார்த்த அவர் குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது வெளியே கடைக்குச் சென்ற தாய் வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்குள் தனது குழந்தையிடம் வைத்யா தவறாக நடக்க முயன்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனே கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். சற்று நேரத்தில் இந்த சம்பவம் காட்டு தீயாக பரவி நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.

உடனே அவரை காவல் நிலையம் வரை நிர்வாணமாக அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து வைத்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #POLICE #MAHARASHTRA #NAKED #NAGPUR #POCSO