‘தனியாக அழைத்து செல்ஃபோனில்’... ‘இளம் ஆசிரியர் காட்டியதைப் பார்த்து’... ‘அதிர்ந்து போன மாணவி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 11, 2019 11:51 AM

பள்ளி மாணவியருக்கு, செல்ஃபோனில் ஆபாச படம் காட்டியதாக, இளம் ஆசிரியர் ஒருவர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

student complaint against her teacher arrested in pocso

தஞ்சாவூர் அருகே, திருவோணத்தில் இருபாலர் பயிலும் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில், நெல்லை சங்கரன்கோவிலைச் சேர்ந்த சாரங்கபாணி (30) என்ற இளம் ஆசிரியர், பணியாற்றி வந்தார். அங்கு 6-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுத்து வந்த அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன், பள்ளியில் மாணவர்களிடம், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக, மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள், ஆசிரியர் சாரங்கபாணியை, திருக்காட்டுப்பள்ளி அருகே, இளங்காடு அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் சாரங்கபாணி, திருவோணம் பள்ளிக்கே, மீண்டும் மாறுதல் வாங்கிக்கொண்டு, கடந்த செவ்வாய்கிழமை அன்றுதான், பணிக்கு திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளியின் முன் திரண்டு, ஆசிரியருக்கு எதிராக வெகுநேரம் போராட்டம் நடத்தினர்.

அப்போது காவல்துறையினரின் சமாதானத்தை, பெற்றோர்கள் ஏற்காதநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து அதேப் பள்ளியில் படிக்கும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர், ஆசிரியர் சாரங்கபாணி, மாணவிகளை தனியாக அழைத்து, செல்ஃபோனில் ஆபாச படங்களை காட்டி தொல்லை செய்ததாக, புகார் அளித்ததாகத் தெரிகிறது.

அதன்பேரில், பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் சாரங்கபாணியை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதுரை என்பவர், ஆசிரியர் சாரங்கபாணியின் தவறான நடவடிக்கைகளை தட்டிக்கேட்டதால், தனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் புகார் தெரிவித்துள்ளார். இந்த இரு புகார்களின் மீதும், தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : #CELLPHONE #POCSO #ABUSE